நீட், யூபிஎஸ்சி போட்டிகளுக்கு இலவச பயிற்சி: மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம்!​

நீட், ஜேஇஇ, யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் SATHEE - (Self Assessment Test and Help for Entrance Exams) என்ற இணைய போர்டலை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில், கணிசமான இளைஞர்கள் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் தனியார் தேர்வு மையங்களில் அதிகப்பணம் செலவு செய்து பயிற்சி எடுத்து வெற்றி பெறுகின்றனர். அதேசமயம், சமூக பொருளாதார நிலையில் பின்தங்கிய இளைஞர்கள் இத்தகைய தேர்விற்கு முழுமையாக தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியாமல், ஒருவித தயக்கத்துடன் தேர்வினை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதிகரித்து வரும் இந்த இடைவெளியைக் குறைக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில் JEE, NEET நீட் போன்ற போட்டிகளுக்கான மாதிரி தேர்வு (MOCK Test) தேர்வுகளை நடத்தும், செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, NEET, JEE, UPSC போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க SATHEE என்ற போர்டலை துவங்கியுள்ளது. இந்த போர்டலில், சிறப்பு வல்லுனர்கள் மூலம் பயிற்சிக் காணொலிகள் வெளியிடப்படும். தேர்வுக்கான பாடக் குறிப்புகளை (notes) இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பாடக்குறிப்பு தொடர்பாக எழும் அனைத்துக் கேள்விகளையும் இங்கு பதில்களைப் பெறலாம்.

Table of Contents

ICAR AIEEA (UG) Exam